தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இந்த சூழலில் தமிழகத்தில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இதனிடையே நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக 3வது நாளாக இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டார்..
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் இந்த அறிவிப்பை வெளீயிட்டுள்ளார்.. மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..