வருமான வரித்துறை ரெய்டு குறித்த தகவல் முன்பே கசிந்தது எப்படி…? அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 80 இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல் முன்பே கசிந்து விட்டதால் பல இடங்களில் ரெய்டுகள் நடத்தியும் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணையை தொடங்கினர். தமிழகம் முழுவதும் 120 தனியார் டிராவல்ஸ் மூலம் கார்கள் வாடகைக்கு வாங்கியதே தகவல் கசிய காரணம். மொத்தமாக கார்கள் புக் செய்யப்பட்டதால் ஓட்டுனர்கள் மூலம் தகவல் கசிந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் தனி தனியாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.