fbpx

செம அறிவிப்பு..! மானிய தொகை உயர்வு… இனி ரூ.15 லட்சம் வரை பெறலாம்..‌.! முழு விவரம் இதோ…

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம்‌ வரை பெறலாம்‌.

ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்‌. எஸ்‌.சி., எஸ்‌.டி., எம்‌.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்‌ 45 வயது வரை கடன்‌ பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும்‌, எஸ்‌.சி., எஸ்‌.டி, எம்‌.பி.சி., பி.சி., சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்க்கு 55 வயது வரையிலும்‌ வங்கியில்‌ விண்ணப்பிக்க தகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில்‌ வியாபாரம்‌ செய்வதற்கு அதிக முக்கியத்துவம்‌ அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அரசு தடை செய்தபொருட்கள்‌ பட்டியலை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்கி விற்கலாம்‌.தொழிற்சாலை இயந்திர உபரிபாகங்கள்‌, மூலப்பொருட்கள்‌, கடை குறிப்பாக மளிகை, பெட்டிக்‌ கடை, பேன்சி ஸ்டோர்‌, ஸ்டேஷ்னரி கடை தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

Vignesh

Next Post

அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!... 2 நாட்களில் முகத்தை பொலிவாக்கும் எலுமிச்சை, உப்பு!

Tue Jun 6 , 2023
எலுமிச்சை மற்றும் உப்பை முகத்தில் தடவி வந்தால், பல நன்மைகளைப் பெறலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். எலுமிச்சை உங்கள் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சி (Vitamin C) அதிகளவு இருப்பதால் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும். மறுபுறம், உப்பு உங்கள் தோலில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எலுமிச்சை மற்றும் உப்பை முகத்தில் தடவி […]

You May Like