கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 11ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்திருக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆன்லைன் மூலம் பொதுக்குழுவை நடத்த மாற்றுத் திட்டத்தையும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பாக, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் பொதுக்குழுவை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், கொரோனாவைக் காரணம் காட்டி, அரசு அனுமதி வழங்காத பட்சத்தில், இந்த மாற்றுத் திட்டத்தைப் பயன்படுத்தவும் அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.