fbpx

அதிகரிக்கும் வெப்பநிலை.. பொதுமக்கள் இதை எல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.. மாநில அரசு அறிவிப்பு..

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.. கண்ணூரில் அதிகபட்சமாக 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது மற்றும் பாலக்காடு உட்பட வடக்கு கேரளாவின் பல பகுதிகளில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் பதிவான சராசரி வெப்பநிலை அன்று 36.2 டிகிரி செல்சியஸ் ஆகும். புதன். வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் அதிக வெப்பநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கேஎஸ்டிஎம்ஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது..

கேரள அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்

  • காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்..
  • வெளியே செல்லும் போது நீரிழப்பைத் தடுக்க எப்போதும் ஒரு பாட்டில் குடிநீர் வைத்திருக்க வேண்டும்.
  • முடிந்தவரை இளநீர் அருந்தவும். உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் குடிநீரை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • மது, காபி, தேநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்ற பானங்களை பகலில் தவிர்க்கவும்.
  • மென்மையான, தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும்.
  • வெளியே செல்லும் போது காலணி அணிய வேண்டும்.. குடை அல்லது தொப்பியைப் பயன்படுத்துவது நல்லது.
  • கோடை வெப்பம் அதிகரிக்கும் போது காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.
  • காட்டுத் தீயை தவிர்க்க வனத்துறையின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • கோடை காலத்தில் சந்தைகள், கட்டிடங்கள், கழிவு சேகரிப்பு மையங்கள் போன்ற இடங்களில் தீ பரவ வாய்ப்பு உள்ளது. தீயணைப்புத் தணிக்கை நடத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் வகுப்பறைகளில் போது காற்றோட்ட வசதி இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  • தேர்வு காலம் என்பதால் தேர்வு கூடங்களிலும் தண்ணீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
  • மாணவர்கள் விஷயத்தில் பள்ளி அதிகாரிகளும், பெற்றோர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை வெளியூர் பயணங்களுக்கு அழைத்துச் செல்லும் பள்ளிகள், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள் நேரடியாக வெப்பம் தாக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அங்கன்வாடி குழந்தைகளை வெப்பத்தால் பாதிக்காத முறையை செயல்படுத்த அந்தந்த ஊராட்சி அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.
  • முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • மதிய வேளைகளில் (காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை) இரு சக்கர வாகனங்களில் ஆன்லைன் உணவு விநியோகம் செய்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். வெப்பம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு சரியான உடை அணிய அறிவுறுத்தப்பட வேண்டும், தேவைப்பட்டால் பயணத்தின் போது சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.
  • ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த நேரத்தில் (காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை) குடைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும். பணியில் இருக்கும் காவலர்களுக்கு குடிநீர் வழங்குவதன் மூலம் நீர்ச்சத்து குறைவை தடுக்க உதவுங்கள்.
  • பயணிகள் போதுமான ஓய்வுடன் பயணத்தைத் தொடர வேண்டும். தண்ணீரை கைவசம் வைத்திருங்கள்.
  • கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் வெயிலிலி வேலை செய்வோர் தங்கள் வேலை நேரத்தை சரிசெய்ய வேண்டும். வேலையில் போதுமான ஓய்வை உறுதி செய்யவும்.
  • மதிய வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையும் மற்ற வீட்டு விலங்குகளை கட்டி வைப்பதையும் தவிர்க்கவும். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும்.
  • நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், உடனடியாக ஓய்வெடுத்து மருத்துவ உதவியை நாட வேண்டும்..

Maha

Next Post

'உடல் எடையை குறைக்க வொர்க்கவுட்....." புதுச்சேரியில் பெண் உடற்பயிற்சியாளராக நடித்த நபர்! சைபர் க்ரைமில் புகார்!

Thu Apr 13 , 2023
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்களிடம் பேசி அவர்களின் புகைப்படங்களை வாங்கி உடலமைப்பிற்கு […]

You May Like