‘200 கோடி’ கொரோனா தடுப்பூசிகள் என்னும் முக்கிய சாதனையை படைத்துள்ளது இந்தியா.
ஒரு வரலாற்று சாதனையாக, இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசி இயக்கம் 200 கோடி என்னும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. நேற்று மதியம் 1 மணி வரையிலான தற்காலிக நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 2,00,00,15,631 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,63,26,111 அமர்வுகள் மூலம் இது எட்டப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை “அளவிலும் வேகத்திலும் இணையற்றது” என்று கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் 18 மாதங்களில் இந்த சாதனையை நாடு படைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த அசாதாரண சாதனை வரலாற்றில் பொறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், மனிதகுலத்தின் சேவையில் புதிய சாதனையை ஏற்படுத்துவதில் கடின உழைப்பு, தொலைநோக்கு மற்றும் கண்டுபிடிப்புகளை அளித்த சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Also Read; “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!