வங்கி வேலை தேடும் நபர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை அறிமுகம்…! 1,010 காலிப்பணியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Clerk பணிகளுக்கு என 1010 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதார்கள் Personal Interaction மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 850 ரூபாய் ஆக விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 20.04.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: IBPS-Clerk-Vacancies-Notification.pdf

Also Read: “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!

Vignesh

Next Post

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்திய இளைஞர் மரணம்..! மருந்துக்கடை உரிமையாளர் கைது

Mon Jul 18 , 2022
வலி நிவாரணி மாத்திரைகளை சிரிஞ்சு மூலம் போதைக்காக தனக்குத் தானே செலுத்திக் கொண்ட மாணவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய்குமார் (20) என்பவர் பி.இ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், அஜய்குமார் கடந்த 13ஆம் தேதி திடீரென வாந்தி எடுத்து […]

You May Like