fbpx

டிசம்பர் 29ம் தேதி வரை இந்தியா – நேபாளம் இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி…!

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான “சூர்ய கிரண்” 16-வது முறையாக நேபாள ராணுவப் போர்ப் பள்ளி அமைந்துள்ள சல்ஜாண்டியில், 2022 இன்று முதல் டிசம்பர் 29 வரை நடைபெறவுள்ளது. “சூர்ய கிரண்” பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவும் நேபாளமும் காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சி மேற்கொள்கின்றன.

நேபாளத்தின் ஸ்ரீ பவானி பக்ஷ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இந்தியாவின் 5-வது கோர்க்கா ரைபிள் படைப்பிரிவினரும் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இரண்டு ராணுவங்களும் தங்களது அனுபவங்களை இந்த பயிற்சியின் போது பகிர்ந்துகொள்ளும்.தீவிரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளின் போது மனிதாபிமான நடவடிவக்கைகள் போன்றவற்றில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுடன், இணைந்து செயல்படும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Vignesh

Next Post

எப்படி இருந்த மனுஷன்!!! உடல் மெலிந்து காணப்படும் விஜயகாந்த்...

Fri Dec 16 , 2022
தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர் தான் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த். இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து […]

You May Like