வங்கதேசம் –இந்தியா இடையான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் கொடுக்கப்பட்ட 151 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் வங்கதேச அணி தோல்வியடைந்தது..
டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச அணி களமிறங்கியது.
7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. அந்த அணியைச் சேர்ந்த லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். ஷட்டோ 7 ரன் எடுத்து களத்தில் இருந்தார். இந்நிலையில் மழை வந்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் இடை நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

மழை காரணமாக 16 ஓவர்களாக வங்கதேச அணிக்கு குறைக்கப்பட்டு 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என புது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழை முடிந்ததும் ஆட்டம் தொடங்கிய நிலையில், 6 விக்கெட்டை இழந்த வங்கதேச அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி பாலில் 7 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வீசும் பந்து ’நோ பால் ’ ஆனால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு என்ற நெருக்கடியில் பந்தை வீசியது இந்தியா. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து 145 ரன்கள் மட்டுமே சேர்த்தது வங்கதேச அணி..
லிட்டன் தாஸ் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் வீசிய துல்லியமான த்ரோவால் ரன் அவுட்டானார். இதன் மூலம் முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி அதன் பிறகு சரிவை சந்தித்தது. சாண்டோ (21 ரன்கள்), கேப்டன் சாகிப் (13 ரன்கள்) அபிப் ஹொசைன் (3 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் கடைசி ஓவரில்(16-வது ஓவர் ) அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி குரூப் பி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.