இந்தியா மிக விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறிவிடும் என்று பிரபல சாமியார் திரேந்திர சாஸ்திரி தெரிவித்துள்ளார்..
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பகேஷ்வர் தாம் சர்க்கார் என்ற புகழ்பெற்ற மடத்தின் பீடாதிபதிபதியாக உள்ளவர் திரேந்திர சாஸ்திரி.. பிரபல சாமியாராக கருதப்படும் திரேந்திர சாஸ்திரி, தொடர்ந்து இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அழைத்து வருகிறார்.. இந்நிலையில் ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் “ இந்தியா ‘இந்து ராஷ்டிரா’ ஆகிவிடும். வெளிநாட்டில் உள்ளவர்கள் கூட இன்று நமது நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் கிறித்தவ மதத்தை பின்பற்றலாம்.. ஆனால் ‘சனாதன தர்மத்தை’ நம்புகிறார்கள்… அதாவது வெளிநாட்டினர் கூட இந்துத்துவத்தை பெருமையுடன் சொல்லக்கூடிய இந்தியாவை விரும்புகிறார்கள். அனைத்து சாதி வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் இந்துஸ்தானி என்பதில் பெருமிதம் கொள்வோம்..
எங்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கோ அல்லது ஆட்சி அமைப்பதற்கோ எந்த லட்சியமும் இல்லை. ஆனால் யாராவது எங்களை ஆதரிக்க விரும்பினால், அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எங்களை ஆதரிக்க அனைத்து இந்துக்களையும் நாங்கள் அழைக்கிறோம். இந்தியா மிக விரைவில் இந்து ராஷ்டிராவாக மாறும்,” என்று தெரிவித்தார்.. திரேந்திர சாஸ்திரிக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.