இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Owner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 11 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணியில் முன்ன அனுபவம் இருப்பது அவசியம். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interaction அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக செப்டம்பர் 3-ம் தேதி ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.indianbank.in