உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி உலகம் முழுதும் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அடங்கியபாடில்லை. போட்டியை நேரில் பார்த்து ரசித்த இந்திய பிரபலங்கள் பலர் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது டிரண்டாகி வருகிறது.
கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் சென்று பார்வையிட்ட மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் பாலிவுட் நடிகர்கள் கார்த்திக் ஆர்யன், ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், உள்ளிட்ட பலரும் லுசைல் மைதானத்தில் இருந்து புகைப்படங்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படங்கள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

ஈஷா நிறுவனரான சத்குரு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அற்புதமான இறுதிச்சுற்று. இது கால்பந்துக்கு கிடைத்துள்ள வெற்றி! உண்மையிலேயே மிகத் திறமையாக விளையாடி அசத்திய அர்ஜென்டினா & பிரான்சு அணிகளுக்கு பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.