அமெரிக்காவில் வசிக்கும் அருணா மில்லர் 6 நவம்பர் 1964 நாள் அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்து, தன்னுடைய ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு மிசோரி என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இவர் சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
அத்துடன் மாண்ட்கோமெரி கவுண்டி பகுதியில் உள்ளூர் போக்குவரத்துத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 58 வயதான அருணா மில்லர் அதிபர் ஜோ பைடனான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவர்.
இத்தகைய நிலையில், அருணா மில்லர் அமெரிக்காவில் இருக்கும் மேரிலாந்த் மாகாணத்தில் நடைந்த கவர்னர் தேர்தலில் துணை கவர்னராக வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், இவரே முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் எனும் பெருமையையும் பெற்று இருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.