fbpx

அடிதூள்…! இனி இந்தியா- சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ பண பரிவர்த்தனை செய்யலாம்…!

இந்தியா- சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகளான இந்தியாவின் UPI முறை மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் மற்றும் சிங்கப்பூர், நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.

டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு உலக அளவிலான பங்கேற்பை இந்தியா உறுதி செய்து வருகிறது. இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறைகளை இணைப்பதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வேகமாகவும், சிக்கனமாகவும் எல்லைதாண்டிய பணப்பரிவர்த்தனைகளை செய்யமுடியும். மேலும், சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோர் உடனடியாக குறைந்த செலவில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Vignesh

Next Post

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இந்த 12 நாட்களும் வங்கிகள் செயல்படாது..!! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

Tue Feb 21 , 2023
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடலாம். ஆனால், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்பது பொருந்தும். தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்கள்… 3.3.2023 […]

You May Like