இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் குறிவைக்கப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நிறுவனமான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது… சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழு அரசாங்கத்தின் முக்கியமான பிரிவுகளை குறிவைத்து வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வகையான தாக்குதல்கள் கணினிகளை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மாநில மற்றும் மத்திய அரசு இணையதளங்களை உள்ளடக்கிய ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது..
இதுதொடர்பாக அரசு ஊழியர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.. அதில் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும், தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களைக் கிளிக் செய்யவோ அல்லது திறக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் அனைத்து அரசாங்க அமைப்புகளும் அவற்றின் மென்பொருள் பதிப்புகள் அப்டேட் செய்யப்பட்ட நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது…
இந்த நவீன யுகத்தில் சைபர் தாக்குதல் ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.. உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு அரசு அல்லது தனிப்பட்ட நபர்களின் தரவுகளை திருடலாம். அந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்.. இது ஒரு பெரிய ransomware தாக்குதல் என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..