fbpx

ஆடு, மாடு, கோழி, வளர்க்கும் விவசாயிகளுக்குவட்டியில்லா கூட்டுறவுக் கடன்…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!

ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்படும்.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன்படி, 2023-24 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது வேளாண் மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் கடந்த 18-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2023-24-ம் நிதியாண்டுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஒரே அடி ஆள் காலி .! கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட 64 வயது பெண்.! மகன் மருமகள் வெறி செயல்.!

Sun Dec 24 , 2023
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 64 வயது பெண் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அந்தப் பெண்ணின் மகன் மற்றும் மருமகளை கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி பாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன் ராஜேந்திரா மற்றும் அவரது மனைவி ரேகாவுடன் தங்கியிருக்கிறார். இந்நிலையில் சொத்து தொடர்பான […]

You May Like