fbpx

பிரதமர் ஆகிறாரா மு.க. ஸ்டாலின்.? திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி பதில்.!

திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் 100 வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வைத்து நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கருணாநிதி தமிழகத்தின் எதிர்காலம் திராவிட சிந்தனை உள்ள இந்த குழந்தைகளின் கைகளில் இருப்பதே மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு எதிர்க்கட்சிகளை ஐடி ரெய்டு மற்றும் கமலாக்கத்துறை சோதனைகளின் மூலம் முடக்கி விடலாம் என நினைக்கிறது. ஆனால் கொள்கை உறுதிமிக்க திராவிட கட்சிகளிடம் அது எடுபடாது எனவும் தெரிவித்திருக்கிறார்.

வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இதுவரை வெற்றி பெற்ற அனைவருக்கும் தளது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் .

இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி கருணாநிதி வர இருக்கின்ற கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கலந்து ஆலோசித்து விரைவில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் நடைபெற்று வரும் ஐந்து மாநில தேர்தல்களிலும் இந்திய கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Post

’உன்னை நான் காப்பாத்துறேன்’..! டாக்டரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்..!! அமலாக்கத்துறை அதிகாரி அதிரடி கைது..!!

Fri Dec 1 , 2023
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாகக் கூறி இன்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி என்பவர் ரூ.20 லட்சம் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார், அங்கித் திவாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரது காரில் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் […]

You May Like