அந்த காலத்தில் அனைவருமே தலையில் அமர்ந்து சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நம் வீடுகளில் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மை. தரையில் அமர்ந்து இலையில் சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நன்மைகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?
பொதுவாக தரையில் கால்களை மடித்து உட்காருவது ஒருவகையான யோகா பயிற்சியாக இருந்து வருகிறது. மேலும் உணவு உண்ணும் போது உணவு அளித்த நிலைத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக தலையை கீழே குனிந்து சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். இவ்வாறு தரையில் அமர்ந்து கீழே குனிந்து சாப்பிடும் போது நாம் செரிமான மண்டலத்திற்கு நல்லது.
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் முதுகெலும்பும் நேராக இருக்கும். மேலும் முதுகு வலி, இடுப்பு வலி உள்ளவர்கள் தரையில் அமர்வது வலியை சரி செய்யும். மூட்டு வலி உள்ளவர்கள் தரையில் உட்கார்ந்து எழும்போது மூட்டு எலும்பு இயக்கத்தில் இருப்பதால் இரத்த ஓட்டம் சீராகும்.
தரையில் உட்கார்ந்து எந்தவித உதவியும் இல்லாமல் எழுந்திருக்கும் நபர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள வேகமான காலகட்டத்தில் ஒரு வேளையாவது தரையில் உட்கார்ந்து உணவை சாப்பிட வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.