கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, தற்போது நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. மேலும் H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்.. குறிப்பாக H3N2- பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவு 90 க்குக் குறைவாக இருந்தால் அவர்களை அனுமதிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.. எனவே கொரோனாவுக்கும் H3N2 வைரஸுக்கும் தொடர்புள்ளதா, H3N2 கொரோனா பெருந்தொற்றை போல பேரழிவை ஏற்படுத்துமா என மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.. இந்த நிலையில் H3N2 வைரஸ், கொரோனாவுடன் தொடர்புடையதா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்..
டாடா மருத்துவம் மற்றும் நோயறிதல் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரும், வைரலாஜி நிபுணருமான வி ரவி பேசிய போது ,”H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவலான விகிதத்தில் பரவுகிறது, ஆனால் கொரோனா உடன் எந்த தொடர்பும் இல்லை.. தற்போது, இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் மிகவும் தீவிரமானவை, ஏனெனில் பெரும்பாலான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர், மேலும் அவை மிகவும் லேசான அறிகுறிகளைக் காட்டுகின்றன.முகக்கவசம் அணிவது இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் மற்றும் கொரோனாவுக்கு எதிரான இறுதிப் பாதுகாப்பு ஆகும்..” என்று தெரிவித்தார்..
H3N2 மற்றும் கோவிட் இடையே உள்ள ஒரே தொடர்பு, இரண்டும் சுவாச நோய்கள் ஆனால் அவற்றுக்கிடையே எந்த தொடர்பும் இல்லை என்று கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் தொற்று நோய் ஆலோசகர் டாக்டர் தனு சிங்கால் கூறினார். பொதுவாக, இன்ஃப்ளூயன்ஸா பரவுவது வானிலை மாற்றங்களால் தூண்டப்படுகிறது என்றும், தற்போது குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு மாறுவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
H3N2 வைரஸால் யாருக்கு அதிக ஆபத்து..? பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக குழந்தைகள் H3N2 தொற்று நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்.. மேலும் அவர்கள் பள்ளியில் உள்ள மற்ற பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்வதால் வைரஸ் பரவல் அதிகரிக்கிறது. பல குழந்தைகளுக்கு பருவகால காய்ச்சல் தடுப்பூசிகளும் செலுத்தப்படவில்லை என்பதால், குழந்தைகள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இணை நோய் உள்ளவர்களும், வயதானவர்களும் ஆபத்தில் உள்ளனர்..
H3N2 வைரஸை எப்படி தடுப்பது..? H3N2 காய்ச்சல் மற்றும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள, முகக்கவசம் அணிவதே ஒரே வழியாகும்.. அதிக காய்ச்சல், கடுமையான இருமல், தொண்டை வலி, மேலும் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்..
- திரவ உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்
- போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்
- ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்
- கைகளை தொடர்ந்து கழுவ வேண்டும்
- வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும்.
- நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்
- சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.