fbpx

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? இல்லையா? பொதுக்குழு அன்றே தீர்ப்பு வழங்கும் ஐகோர்ட்..!

ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு ஒத்திவைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக்குழுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

General secretary post will be revived, says AIADMK amid EPS-OPS tussle -  The Week

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்? பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

After legal setback against OPS, EPS camp may call for interim meet to pass  resolution on unitary leadership - India News

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடராமல், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கல் கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேணடும் என எடப்பாடி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜூலை 11ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பேனர்கள் வைப்பதை தடை செய்ய உரிய விதிகளை வகுக்க சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு | Chennai High Court order to impose appropriate rules to prohibit  placing of banners – News18 Tamil

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதியேதான் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். காலை 9.15 மணிக்கு பொதுக்குழு தொடங்கும் நேரம் என திட்டமிடப்பட உள்ள நிலையில், 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது. இதனால், ஜூலை 11ஆம் தேதி காலை பொழுது அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரு தரப்புக்கும் திக் திக் நிமிடங்களாக கடக்கும்.

Chella

Next Post

இந்த கோலத்திலா உன்னை பார்க்க வேண்டும் கதறி அழுத தாய்... முன் விரோதம் காரணமா போலீசார் விசாரணை...!

Fri Jul 8 , 2022
காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஜய். இவர் இந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். விஜய்யின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதன் பிறகு விஜய் கட்டுப்படுத்த ஆள் இல்லாததால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் விஜய் அவருடைய தாய் பாஞ்சாலியுடன் எப்பொழுதும், சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் செவிலிமேடு பகுதியிலேயே விஜய் தனியாக ஒரு வீடு வாடகைக்கு கொடுத்து அதில் வசித்து […]

You May Like