fbpx

கோவிட் தடுப்பூசி தான் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமா..? ஐசிஎம்ஆர் பரபரப்பு விளக்கம்..!!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய இளைஞர்கள் மாரடைப்பு உட்பட ஒரு சில காரணங்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, ஜிம்மில் அதிக அளவு ஒர்க் அவுட் செய்பவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி தான் காரணம் என்று கூறுவது சரியல்ல என்றும் கொரோனா சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2021 அக்டோபர் 1 முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை உயிரிழந்த 18 முதல் 45 வயதினர்களை ஆய்வு செய்த பின்னர் அறிந்து முடிவு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தடுப்பூசி காரணமாகத்தான் இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வருகிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த தகவலை ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Chella

Next Post

ரூ.22கோடிக்கு விற்கப்பட்ட, 60 வருடம் பதப்படுத்தப்பட்ட விஸ்கி..! ஒரே ஒரு சொட்டு போதும்…

Tue Nov 21 , 2023
ஸ்காட்ச் விஸ்கி என பிரபலமடைந்துள்ள ஸ்காட்லேண்டு நாட்டின் விஸ்கி மதுபானம் உலகெங்கும் பலரால் விரும்பப்படுபவை. இவற்றின் தரத்திற்காகவும் சிறப்பான சுவைக்காகவும், மதுபான பிரியர்கள் ஸ்காட்ச் விஸ்கிக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது வழக்கம். மிக அரிதான பொருட்களை விற்க விரும்புபவர்களுக்கும் அவற்றை வாங்க விரும்புபவர்களுக்கும் இடையே ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனம், சாத்பீ’ஸ் (Sotheby’s). பன்னாட்டு நிறுவனமான சாத்பீ’ஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக […]

You May Like