fbpx

அதிமுகவின் முக்கியப் புள்ளி தவெக-வில் இணைவது உறுதியா..? எடப்பாடி பழனிசாமியே சொன்ன பரபரப்பு தகவல்..!!

தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் இணைய உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

குறிப்பாக, 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட அதிமுக மூத்த நிர்வாகியும் , அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான செஞ்சி ராமச்சந்திரன் த.வெ.கவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த செய்தி குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”த.வெ.கவில் அவர் இணைய உள்ளதாக அவரே சொன்னாரா.? இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி.

அதிமுக ஒரு கடல் போன்றது. அவர் போல ஆயிரக்கணக்கானோர் கட்சிக்காக உழைத்து வருகின்றனர். 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. இது பொன்விழா கண்ட கட்சி. செஞ்சி ராமச்சந்திரன் பற்றி திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார். இதற்கிடையே, செஞ்சி ராமச்சந்திரன் போல உழைக்க அதிமுகவில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்ற எடப்பாடி பழனிசாமியின் கூற்று, அவர் சென்றாலும் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது போல இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More : உயில் எழுதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

They plan and spread rumors about Senji Ramachandran. This is reprehensible

Chella

Next Post

10 ஆம் வகுப்பு போதும்.. ஊர்க்காவல் படையில் வேலை..!! சொந்த ஊரிலே பணி.. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Mon Sep 9 , 2024
Superintendent of Police Rajaraman said that those interested in joining the Cuddalore District Home Guard Force can apply.

You May Like