அந்தரங்க உறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு ராகிங் செய்த மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் ஒருவர், வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அழுது கொண்டிருந்துள்ளார். அப்போது, இதைப் பார்த்த பெற்றோர், எதற்காக அழுகிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவன், ”என்னுடன் சேர்த்து 3 முதலாமாண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்தனர். பார்க்கும் இடத்திலெல்லாம் அசிங்கமாக பேசுவது, உடலை வைத்து அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
ஒருநாள், எங்கள் மூவரையும் பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றச் சொன்னார்கள். அதற்கு மறுத்ததால், எங்களை கொடூரமாகத் தாக்கினர். பின்னர், அவர்களே எங்கள் ஆடைகளை கழற்றினர். காம்பஸ் கருவியால் பல இடங்களில் கீறினர். அதுமட்டுமின்றி, உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தப்படும் டம்பிள்ஸை எங்களது ஆணுறுப்பில் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்தனர். வலியால் கதறினோம். காயத்திற்கு பாத்ரூம் கழுவப் பயன்படுத்தப்படும் லோஷனை ஊற்றினர்.
இதை அவர்கள் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்ட அவர்கள், அதை காட்டி மிரட்டி எங்களிடம் இருந்து பணம், மதுபானம் ஆகியவற்றை வாங்கித் தர சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்” என்று மன வேதனையுடன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் காந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, சாமுவேல் ஜான்சன், ஜீவா, ராகுல்ராஜ், ரிஜின் ஜித்து மற்றும் விவேக் ஆகிய 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான மாணவர்களை சஸ்பெண்ட் செய்தும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More : பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் இணை ஆணையர்..!! அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்..!!