கொரோனாவால் தாய், தந்தையை இழந்து, தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கப்பட்டு வருவதாக இதுபோன்ற குழந்தைகள் தன்னிறைவு பெறும் வகையில், அவர்கள் 23 வயதை எட்டும் வரை சுகாதார காப்பீடு மற்றும் கல்வி உதவிகள் வாயிலாக உதவியளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின்கீழ், சேர்க்கப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும் போது, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, பணம் மத்திய அரசால் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள அறிவிப்பு ஒன்றில்; 2022-23 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டணம் வசூல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். அதை தொடர்ந்து அந்த மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பயின்றுவரும் அந்த தனியார் பள்ளியிலேயே பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விவரங்களை பெறும் கல்வித்துறை அந்த மாணவர்களின் பள்ளி கல்வி கட்டணத்தை அரசிடம் சமர்ப்பிக்கும். அதன்பிறகு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இதன் மூலம் கொரோனா காலகட்டத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தாங்கள் பயின்ற தனியார் பள்ளிகளிலேயே கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: தொடர்ச்சியாக நடைபெறும் தேர் விபத்து.. திமுக அரசை கடுமையாக சாடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…!