fbpx

தூள் அறிவிப்பு…! 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா…?

9-ம் வகுப்பு மாணவர்கள் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குநா் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த தேர்வு எழுதி தகுதி பெற்றவா்கள். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் எழுதலாம். அவா்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் நிகழாண்டுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவா்கள், தங்கள் பள்ளி தலைமையாசிரியா்கள் வாயிலாக நவம்பா் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 மட்டும் செலுத்த வேண்டும். மாணவா்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியா்கள் தேர்வு துறை இணையதளத்தில் நவம்பா் 17 முதல் 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவா்களின் விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதவிர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிகழமே... இன்று மொத்தம் 19 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை...! உங்க மாவட்டம் இருக்கா...?

Tue Nov 14 , 2023
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 19 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி […]

You May Like