fbpx

வரும் 10-ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு…!

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மாநகராட்சி இறைச்சி கூடங்கள் 10-ம் தேதி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் இயங்குகின்றன. மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி, இந்த 4 இறைச்சிக் கூடங்களும் ஏப்.10-ம் தேதி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை விடுமுறை

வருடத்தில் 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விடுமுறை விடப்படுகிறது. இதன் படி, திருவள்ளுவர் தினம், மிலாடு நபி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமே கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.இந்த நிலையில் வருகிற 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. இதே போல மகாவீர் ஜெயந்தி தினத்தில் இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுளது. இதன் படி பெருநகர மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர் வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

English Summary

It has been informed that the corporation slaughterhouses will not operate on the 10th in view of Mahavir Jayanti.

Vignesh

Next Post

இன்று நேரில் ஆஜராவாரா சீமான்..! "சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" -நீதிபதி எச்சரிக்கை

Tue Apr 8 , 2025
Seeman will not appear in person today..! "Strict legal action will be taken" - Judge warns

You May Like