மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் சாந்திமலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில், பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பு, போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியப் படிப்புகளில் சேர்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில், இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
Also Read; குடியிருப்பு பகுதிகளில் சூரியசக்தி மேற்கூரைக்கு மானியம்… வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்…!