fbpx

இந்தியர்களை ஏற்றி சென்ற நேபாள பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து..!! 14 பேர் பலி.. பலர் மாயம்!!

நேபாளத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் போகராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்ற பேருந்து மா்சயங்டி ஆற்றுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானது. உத்தர பிரதேச பதிவெண் கொண்ட அந்த பேருந்தில் இந்தியர்கள் உட்பட 40 பேர் பயணம் செய்தனர்.

இதுகுறித்து தனாஹூன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்குமார் ராயா கூறுகையில், ” ‘UP FT 7623’ என்ற பதிவெண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து கரையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. போகாராவில் இருந்து நேபாள தலைநகரான காத்மாண்டுவுக்கு செல்லும் போது பேருந்து விபத்துக்குள்ளானது. இந்தியர்கள் பலர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த யாராவது பேருந்தில் இருந்தார்களா என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். இந்த விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மலைப்பகுதி என்பதால் ஆற்றில் கவிழ்ந்த பேருந்தை மீட்பது சிரமம் என நேபாள போலீசார் கூறி உள்ளனா்.

Read more ; National Space Day 2024 | ‘வானம் கூட எல்லை அல்ல..!!’ முதல் தேசிய விண்வெளி தினம் இன்று..!!

English Summary

It has been reported that 14 people died when a bus carrying 40 people, including Indians, overturned in a river in Nepal.

Next Post

அனில் அம்பானிக்கு ஆப்பு வைத்த செபி..!! இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை..!!

Fri Aug 23 , 2024
Sebi has banned Anil Ambani's company from trading on the Indian stock market.

You May Like