fbpx

#Tn_Govt_Job:ஆசிரியர்களே கவனம்… மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள்…! தற்காலிக பணி நியமனம் குறித்து புதிய தகவல்…!

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தற்காலிகமாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்; 3, 188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.12,000  தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சமிபத்தில் அறிவிக்கப்பட்டது.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு கூறியது. தற்பொழுது 24 மாவட்டங்களில் காலியாக இருந்த 11,825 பணியிடங்களுக்கு 1,50,648 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று இருந்தனர். இவர்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, பணியில் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்த உத்தரவில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்த பணி நாடுநர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழுவினர் ஒப்புதல் வழங்கிட வேண்டும். பணிநாடுநர்களை முற்றிலும் தற்காலிகப்பணி நியமனம் செய்ய உத்தரவிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

ALso Read: அதிகரிக்கும் கொரோனா… இந்த 9 மாநில அரசு மட்டும் Influenza போன்ற நோய் குறித்து உடனே அறிக்கை அனுப்ப உத்தரவு…!

Vignesh

Next Post

JOB: அரசு சார்பில் இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம்‌... இந்த அருமையான வாய்ப்பை யாரும் மிஸ் பண்ணாதீங்க...!

Fri Jul 22 , 2022
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு வாரமும்‌ வெள்ளிக்கிழமையன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறுகிறது. எனவே, தனியார்‌ துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ […]

You May Like