சேலம் மாவட்டம் வெங்கம்பட்டியில் வசிக்கும் அண்ணாமலை, அவரது மகன் சந்தோஷ், ஒன்பது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட ஏற்காடு சென்றார்.
ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து நள்ளிரவில் மது அருந்தியும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடினர்.
திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சந்தோஷை நண்பர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அன்றைய தினத்தில் தான் சந்தோஷ் முதன்முறையாக மது அருந்தியது நண்பர்கள் கூறுகையில் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு மூச்சுக்குழாயில் சிக்கி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கு மனைவியும் மூன்று வயது குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.