திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு, நகராட்சி,ஆதி திராவிடர் நல,அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி கற்றல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஈடுபட மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை முறையாக பயன்படுத்தி கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
மாணவர்களின் பாடக்குறிப்பேடுகள் மற்றும் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள் உரிய தேதியில் திருத்தப்பட்டு கையொப்பமிட வேண்டும். மேலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பாடக்குறிப்பேடுகளை தலைமையாசிரியர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும். முன்னிலைப்படுத்தாத ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்க நேரிடும் என்ற விவரத்தினை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடவும், இதில் தனி கவனம் செலுத்திடவும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.