அதிமுக பாஜகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறது என்று தொடர்ச்சியாக ஓபிஎஸ் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை கூறுகையில், ”இன்னொரு கட்சியுடனுடைய உட்கட்சி பிரச்சனை பற்றி நாங்கள் பேச மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 2017, 2018, 2019, 2020 2021ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அந்த கட்சி எப்படி இருந்தது, அப்போது நாங்க இல்லை, நான் பொறுப்பல்ல, பாஜக கட்சி பொறுப்பல்ல. அதை உள்ளே இருந்து பார்க்கிறவங்க சொல்கிறாங்க என்றால், அது அவரது தனிப்பட்ட கருத்து. எங்களை பொறுத்தவரை இன்னொருடைய கட்சி பிரச்சனையில் நாங்கள் குளிர்காய விரும்பவில்லை .
ஓ.பன்னீர்செல்வம் உள்ளே இருந்து அந்த பிரச்சனையை பார்த்துள்ளார். அதை வைத்து அவர் கருத்து சொல்கிறார். எனவே, இது அவருடைய கருத்து. அவர்கிட்ட தான் கேட்க வேண்டும். தொடர்ந்து பிரதமர் மோடி மீது மிகப்பெரிய அனுமானமும், மரியாதையும் வைத்திருக்கக்கூடியவர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாளைய தினம் தேசிய தலைவர் ஜேபி நட்டா சென்னை வருகிறார். கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பிறகு கூட்டணி பற்றி நான் சொல்கிறேன்” என்றார்.