அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராக தொடர பலனும் இல்லை என்று கருத்து.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வருவதற்கு எதிராக ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன், வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இதில்,எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் இலாகா இல்லாத அமைச்சர் பதவி குறித்த வழக்குகளில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேலவலு அமர்வு தற்போது தீர்ப்பளித்துள்ளது .
அந்த தீர்ப்பில், ஒரு வழக்கில் இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் அமைச்சரவியில் இடம்பெறுவது தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. மேலும் செந்தி பாலாஜி அமைச்சரவையில் தொடர வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும்பிறப்பிக்க முடியாது என்றும், அதே சமயம் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுதாரர்கள் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.