டெல்லி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி குறித்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பாக சொல்சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆகி வாதம் செய்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைக்கப்பட்டனர். அதோடு, அமலாக்கத்துறை தரப்பில் எங்களுடைய விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் ஒத்துழைக்காததன் காரணமாக தான் அவரை கைது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது என்று தெரிவித்திருக்கின்ற அமலாக்கத்துறை, சட்டவிராத பண பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டு இருப்பார் என்ற சந்தேகத்திற்கு வலுவான காரணங்கள் இருந்ததன் காரணமாகத்தான், நாங்கள் அவரை கைது செய்தோம் என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் தற்போது செந்தில் பாலாஜியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், அவர் சட்டத்தை உடைக்க நீதிமன்றமே அனுமதி அளிக்கும் செயலாகத்தான் அது பார்க்கப்படும் என்று சரமாரி குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை முன் வைத்தது.
ஆகவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும் எனவும் விசாரணை நபரை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குப் பெயர்தான் நீதிமன்ற காவல் மருத்துவமனையிலோ அல்லது சிறையிலோ விசாரிப்பது நீதிமன்ற காவலாக இருக்காது என்று தெரிவித்து, தன்னுடைய தரப்பு வாதங்களை அமலாக்கத்துறை முடித்தது.
இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜி அவருடைய மனைவி மேகலா மூலமாக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.