கேரளாவில் உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார் வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதன்முறையாக கேரளாவில் நடிகை பேர்லி மானி உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட யூடியூப் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வுக் குழு சோதனை நடத்தியது.
வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய யூடியூபர்களின் செயல்பாடுகள் மற்றும் வருமானத்தை அவதானித்த பின்னர் அவர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர். சில யூடியூபர்கள் விலையுயர்ந்த நிலம், கட்டிடங்கள் மற்றும் சொகுசு சொத்துக்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.