fbpx

அக்.30 வரை மீண்டும் ஜெயில்..!! சிறையில் கதறும் டிடிஎஃப் வாசன்..!! நீதிபதி பரபரப்பு உத்தரவு..!!

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும், காயமடைந்த வாசனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், டிடிஎஃப் வாசனால் 45 லட்சம் சிறார்கள் தவறான வழிக்குச் செல்கிறார்கள். யூடியூப் சேனலில் வாசனை பார்க்கும் சிறார்கள் அதிவேகத்தில் பைக் ஓட்டுகிறார்கள். இதனால் விபத்துகள் நேரிடுகின்றன என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விசாரணையில், மூன்றாவது முறையாக 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Chella

Next Post

’என்னுடைய உத்தரவுக்காக வெயிட் பண்ணாதீங்க’..!! ’இனி நீங்களே முடிவு பண்ணி லீவு விட்ருங்க’..!! அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

Tue Oct 17 , 2023
வசதி வாய்ப்பு இருப்பதால், எங்களுக்கு உரிமைத்தொகை வேண்டாம் என்று பெண்கள் கூறியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பேரிடர் மேலாண்மை குறித்து கூட்டம் முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்தால் எனது அறிவுறுத்தலுக்கு எதிர்பார்க்காமல், விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம். இடிந்த கட்டடம், ஊறிப்போன காம்பவுண்ட் சுவர், வெடிப்பு விட்ட கட்டடங்கள், மின்சாரம், […]

You May Like