ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்செட்பூர் பகுதியில் ஒரு மாணவி தேர்வு எழுத சென்றபோது அவர் காகித சீட்டுகளை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகத்தார்.
இதனை தொடர்ந்து அந்த மாணவியின் சீருடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி இருக்கிறார். இதனால், அந்த மாணவி அவமானத்தில் வீட்டிற்கு வந்த நிலையில் அவர் தன்னைத்தானே தீ வைத்து எரித்துக் கொண்டார்,
அவரது பெற்றோர் தற்போது மாணவியை மருத்துவமனையில் 80 சதவீத காயங்களுடன் அனுமதித்துள்ளனர், அவரிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தின் படி ஆசிரியர் தன்னை நிர்வாணப்படுத்தி அவமானம் செய்ததாகவும் எவ்வளவோ நான் எதிர்த்தும் கூட உனது சீருடை சீட்டுகள் இருக்கின்றன என்று சந்தேகத்து தன்னை அவமானப்படுத்தியதாகவும் இதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்,
இது குறித்து போலீசார் தற்போது வழக்கு விசாரணை மேற்கொண்ட நிலையில் மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளனர், இந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.