fbpx

Job | டிகிரி முடித்திருந்தால் போதும்..!! தமிழக கூட்டுறவுத்துறையில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக கூட்டுறவு துறையில் மருந்தாளுநர் பணியிடத்திற்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநர் (Pharmacist) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமையுள்ளவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் ஒரு மருந்தாளுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தமிழக அரசு சார்ந்த இந்தப் பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பி.பார்ம், டி.பார்ம் ( B.Pharm, D.Pharm) பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணிக்கு ரூ.11,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த கூட்டுறவு மருந்தகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 31.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : ADMK | ’இப்பவே மெகா கூட்டணி உருவாகியிருச்சே’..!! இரவோடு இரவாக ஆதரவு..!! துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!

Chella

Next Post

Savings | ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்..!! வட்டி எவ்வளவு தெரியுமா..? நல்ல லாபம் கிடைக்கும்..!!

Tue Mar 12 , 2024
பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தைப் போல ஆண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் தான் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் ஆண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் படிப்புக்காக பெற்றோர் பணத்தை சேமிக்க உதவுகிறது. எவ்வளவு முதலீடு செய்யலாம்..? : உங்களின் 10 வயதுக்கு உட்பட்ட மகனின் பெயரில் பொன்மகன் பொது வைப்பு நிதி கணக்கை தொடங்கலாம். ஒரு […]

You May Like