fbpx

ரூ.39,900 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் 10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு வேலை…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Devaram பாடும் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

பணிக்கு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். Devaram பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 39,900 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Executive Officer, Subramaniya Swamy Temple, Tiruchendur, Thoothukudi-628215 என்ற  முகவரிக்கு 12.08.2022 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: Arulmigu-Subramaniya-Swamy-Temple-Notification-for-1-Devaram-Post.pdf – Google Drive

Also Read: “மக்களே அறிய வாய்ப்பு” அரசு சார்பில் வீடு கட்ட கடன் உதவி, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை வழங்கும் முகாம்…! முழு தகவல் உள்ளே….

Vignesh

Next Post

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

Fri Jul 29 , 2022
பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து மத்திய-மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த […]
பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

You May Like