fbpx

சென்னை வாழ் மக்களே உங்களுக்கான ஒரு அருமையான வேலை வாய்ப்பு….! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்….!

சென்னையில் வாழும் மக்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் காலியாக இருக்கின்ற பணியிடம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, சென்னை கிண்டியில் இருக்கின்ற வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் 6️ அலுவலக உதவியாளர் மற்றும் 2 காவலர் பணியிடங்கள் என்று ஒட்டுமொத்தமாக 8 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மக்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

அதோடு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்த நபர்கள் யார் வேண்டுமானாலும், இந்த காலி பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேர விரும்புவர்களின் வயது, வரம்பு என்பது, 18 வயது முதல், 32 வயது வரையில் இருக்க வேண்டும். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 வயது வரையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு 37 வயது வரையில் என வயதுவரம்பு தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பங்களை துணை இயக்குனர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் எண் 42, ஆலந்தூர் ரோடு, திருவிக தொழில்பேட்டை, கிண்டி சென்னை 32 என்ற முகவரிக்கு, நேரில் வந்து, பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Next Post

சமையல் எரிவாயுவின் விலை உயர்வு….! இல்லத்தரசிகள் அதிர்ச்சி….!

Sun Aug 13 , 2023
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை வெகுவாக அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விநியோகத்தை செய்து வருகிறது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலையை பொருத்து தான்,இந்த […]

You May Like