தமிழகத்தில் 4 மாவட்டங்களில்,அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியிருந்தது. நாளை முதல் வரும் 20-ம் தேதி வரை கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றூ அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் நேற்றிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது.. கோயம்பேடு, திருமங்கலம், சென்ட்ரல், தேனாம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.. இதே போல், கிருஷ்ணகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது..இந்த திடீர் மழை இந்த பகுதிகளில் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது..
இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..