fbpx

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு 19ஆம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 21 பேர் உயிரிழந்தனர். நேற்று முந்தினம் மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆக இருந்தது. இதில் 3 பேர் பெண்களும் அடங்குவர்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் நேற்று (ஜூன் 21) உயிரிழந்தனர். 

இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 90 நபர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம்  பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Read more ; சுப நிகழ்ச்சிகளில் 1 ரூபாயை ஏன் தனியாக கொடுக்கிறார்கள் தெரியுமா?. சிறப்பு காரணம்!

Next Post

வெப்ப அலை அலர்ட்!. ஒரே நாளில் 14 பேர் பலி!. கொரோனாவைவிட பயங்கரம்!. 3 மாதங்களில் 143 பேர் மரணம்!

Sat Jun 22 , 2024
Heat wave alert! 14 people died in one day

You May Like