காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆர்.துருவநாராயணா காலமானார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஆர் துருவநாராயணா காலமானார். அவருக்கு வயது 61. மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று காலை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துருவநாராயணா 15 மற்றும் 16 வது மக்களவை உறுப்பினராக இருந்தார் மற்றும் கர்நாடகாவின் சாமராஜநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவரின் மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, குடும்பத்தினருக்கு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.