கர்நாடக அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஏழு வயது சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு செவிலியர் ஒருவர் முறையான மருத்துவ தையல்களுக்குப் பதிலாக பெவிக்விக் பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுகாதார அதிகாரிகள் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்தனர்., இது போன்ற சம்பவங்கள் கிராமப்புற சுகாதாரத்தில் மருத்துவத் தரநிலைகள் குறித்த கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.
கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு செவிலியர் ஏழு வயது சிறுவனின் காயத்திற்கு சிகிச்சையளிக்க, தையல்களுக்குப் பதிலாக பெவிக்விக் பயன்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தையல்கள் குழந்தையின் முகத்தில் நிரந்தர வடுவை ஏற்படுத்தும் என்பதால் பெவிக்விக் பயன்படுத்தியதாக கூறியுள்ளார். பல ஆண்டுகளாக இந்த முறையைப் பின்பற்றி வருவதாகக் கூறியுள்ளார்.
பெவிக்விக் பயன்படுத்துவது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால், நாங்கள் அவரை மேலும் சிகிச்சைக்காக பரிந்துரைத்திருப்போம்,” என்று சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில் அந்த செவிலியர் கூறியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள், நம்பிக்கையின்றி, செவிலியரின் பதிலைப் பதிவு செய்து, சுகாதாரப் பாதுகாப்புக் குழுவில் முறையான புகார் அளித்தனர்.