fbpx

டெல்லி மதுபான கொள்கை ஊழல் : கவிதாவின் சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.  அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி டெல்லி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வழக்கறிஞர் முன்னிலையில் டெல்லி திகார் சிறையில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஆனால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என சிபிஐ தெரிவித்தது.  டெல்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.  இந்த நிலையில், கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Next Post

HEAT STROKE | உயிருக்கே ஆபத்தாகும் அபாயம்.!! அறிகுறிகள், வராமல் தடுப்பது எப்படி.?

Fri Apr 12 , 2024
HEAT STROKE: தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதால் அம்மை வைரஸ் காய்ச்சல் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோன்று கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நிலை பாதிப்பு தான் ஹீட் ஸ்ட்ரோக். வெயில் காலத்தில் கடுமையான வெப்பத்தின் காரணமாக உடலில் உஷ்ணம் […]

You May Like