fbpx

பெண் ஆபாச உடை அணிந்திருந்ததால் இந்த சட்டப்பிரிவு பொருந்தாது…! நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பு…!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எழுத்தாளர் சிவிக் சந்திரன் என்பவருக்கு கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது, புகார்தாரர் ஆத்திரமூட்டும் உடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354A பிரிவின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதன்மையாக இருக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, புகார் அளித்த பெண் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை அணிந்துள்ளார். 74 வயதான மாற்றுத்திறனாளி நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக தனது மடியில் அமர வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக கூறுவதை நம்பமுடியவில்லை. அதனால் பாலியல் பலாத்கார வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 354A குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொருந்தாது எனக்கருதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என நீதிபதி கிருஷ்ணகுமாரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 பிப்ரவரியில் எழுத்தாளர்கள் மாநாட்டின் போது மானபங்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்வதில் தாமதம் குறித்தும் கிருஷ்ணகுமார் கேள்வி எழுப்பினார்.

Vignesh

Next Post

இந்த ஊரில் சகோதரர்கள் இறக்க வேண்டும் என்று சகோதரிகள் சாபம் விடுவார்களாம் .. ஏன் தெரியுமா.?

Thu Aug 18 , 2022
அண்ணன் – தங்கை உறவு என்பது எப்போதுமே ஒரு தனித்துவமானது.. தாய் தந்தைக்கு அடுத்த படியாக அதிக பிணைப்பு ஏற்படுவது சகோதர – சகோதரி உறவில் தான்.. பெற்றோரிடம் கூட சொல்ல தயங்கும் விஷயங்களை அண்ணனுடனோ அல்லது தங்கை உடனோ தான் பகிர்ந்து கொள்கின்றனர்.. இந்த உறவை சிறப்பிக்கும் விதமாகவே ரக்‌ஷ பந்தன் கொண்டாடப்படுகிறது.. ஆனால், சகோதரிகள் தங்கள் சகோதரன் இறக்க வேண்டும் என்று சபிக்கும் இடமும் உள்ளது. ஆம்.. […]

You May Like