fbpx

Kerala | நிலைகுலைய வைத்த நிலச்சரிவு..!! பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு..!!

Kerala | கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 200ஆக அதிகரித்துள்ளது. 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின், இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Read More : வாடிக்கையாளர்களே நோட் பண்ணுங்க..!! ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை தெரியுமா..?

English Summary

While more than a thousand people trapped in the landslide have been rescued alive, the death toll has now increased to 200.

Chella

Next Post

'Digital Arrest Scam' எனக்கூறி மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல்..!! டிஜிட்டல் கைது என்றால் என்ன? எப்படி தப்பிப்பது..!!

Wed Jul 31 , 2024
What is digital arrest scam that can potentially empty your bank accounts

You May Like