fbpx

மருத்துவர் வந்தனாவின் மரணத்திற்கு காரணம் என்ன…..? பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் என்பவர் கொட்டாரகரையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். அங்கே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் வந்தனாவை கந்திக்கோலால் கொடூரமாக குத்தியிருக்கிறார். கை, கழுத்து மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் குத்தப்பட்டதால் படுகாயம் அடைந்த வந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவர் வந்தனாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்லம் அஜிசியா கல்லூரியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த வந்தனாவின் உடல் இரவு கோட்டயத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், முதல் கட்ட பிரத பரிசோதனை அறிக்கையின் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த அறிக்கையின் படி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த மருத்துவர் வந்தனா உடலில் 11 கத்தி குத்துகள் இருக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை படி முதுகில் 6 முறையும், தலையில் 3 முறையும் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்.

உடல் முழுவதும் 23 காயங்கள் இருப்பதாகவும், அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதுகு மற்றும் தலையில் குத்தப்பட்டதன் காரணமாகத்தான் மருத்துவர் வந்தனா உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரிக்க கோரியும், திருவனந்தபுரத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திடம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம் மருத்துவமனையில் கேரள மாநில ஆளுநர் ஆஃரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மருத்துவர் வந்தனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அவருடைய பெற்றோருக்கு ஆறுதலும் கூறினர்.

Next Post

அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை..? நடிகர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

Thu May 11 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில், அதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் புஸ்ஸி ஆனந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மற்றும் நடிகர் விஜய் அடிக்கடி […]

You May Like