fbpx

அதிர்ச்சி.! “13 வயது சிறுவனை கட்டாய பாலியல் உறவுக்கு அழைத்த ராணுவ வீரர்..” ஜாமினை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.!

கேரளாவில் 13 வயது சிறுவனுக்கு பணம் கொடுத்து அவனை கட்டாய உறவுக்கு அழைத்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் ராணுவ அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பொறுப்புடன் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ அதிகாரியே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரர் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் பணியில் இருந்தபோது 13 வயது சிறுவனுக்கு பணம் கொடுத்து தன்னுடனும் தனது சக ராணுவ வீரருடனும் பாலியல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர் .

இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவ பிறர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனுவில் தான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் தனக்கும் சிறுவனின் குடும்பத்திற்கும் இருக்கும் முன்பகை காரணமாக தன் மீது வீண்பழி சுமத்தி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஜாமீனில் விடுதலை செய்தால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மேலும் இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை மிரட்டுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்ததால் ராணுவ வீரரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரின் இது போன்ற செயல் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Next Post

புதிய வரலாறு படைத்த பிரக்ஞானந்தா..!! உலக சாம்பியனை வீழ்த்தி நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தல்..!!

Wed Jan 17 , 2024
இந்திய செஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்தை விட அதிக புள்ளிகள் பெற்று இளம் வீரர் பிரக்ஞானந்தா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். நெதர்லாந்து நாட்டில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நேற்றிரவு நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் 62 நகர்தல்களுக்கு பிறகு […]

You May Like