fbpx

ஒரு தலைக்காதல் மீண்டும்.. ஒரு கொடூர கொலை.. சுத்தியால் அடித்து நிகழ்ந்தேறிய சம்பவம்.!

ஒரு தலை காதலை ஏற்க மறுத்த மறுத்த இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களையும் வெட்டி, வெறித்தனமாக இளைஞர் கொலைச் செய்துள்ளது கேரளாவை தாண்டி அதிர வைத்துள்ளது.

இளம்பெண் விஷ்ணு பிரியாவை ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் தொடர்ந்து தனது காதலைச் சொல்லியும், ஏற்க மறுத்ததால், இளம்பெண்ணை வெறித்தனமாய் கொலை செய்துள்ளார். கொலைச் செய்த இளைஞர் அடுத்த 3 மணி நேரத்துக்குள் காவல் நிலையத்தில் தானே சரணடைந்தார்.

வினோத் என்பவர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி பிந்து. இவர்களின் மகள் விஷ்ணு பிரியா(23). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வருகின்ற நிலையில் இளம் பெண் விஷ்ணு பிரியாவும் அப்பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நெருங்கிய நண்பராக பழகி வந்துள்ளனர்.

நட்பாக பழகிய ஷியாம்ஜித்துக்கு நாளடைவில் விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்டவே, விஷ்ணுபிரியாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். நண்பனாக பழகியவனை விஷ்ணு பிரியா காதலனாக ஏற்றுக் கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. பல முறை தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியும் விஷ்ணு பிரியா, காதலை நிராகரித்து வந்திருக்கிறார்.

விஷ்ணு பிரியா, நேற்று மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதைத் தெரிந்து கொண்ட சியாம்ஜித், விஷ்ணு பிரியாவின் வீட்டிற்குச் சென்று, தனது காதலை ஏற்றுக் கொள்ள சொல்லி கேட்டுள்ளார். அதனை பெரிதும் பொருட்படுத்தாமல் இருந்த விஷ்ணு பிரியா, மறுத்து விட்டு, கோபமாக வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கூறியதால், ஆத்திரமடைந்த சியாம்ஜித் சுத்தியலால் விஷ்ணு பிரியாவின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

விஷ்ணு பிரியா மயங்கி கீழே விழுந்ததும் கோபம் தீராமல் இருந்த சியாம்ஜித் , தன் கையில் வைத்திருந்த கத்தியால் விஷ்ணு பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

Rupa

Next Post

'Bigg Boss - Season 6'..!! தீபாவளியை கொண்டாடிய போட்டியாளர்கள்..!! திடீரென மயங்கி விழுந்த நடிகை..!!

Tue Oct 25 , 2022
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடிய போது ஆயிஷா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், […]
'Bigg Boss - Season 6'..!! தீபாவளியை கொண்டாடிய போட்டியாளர்கள்..!! திடீரென மயங்கி விழுந்த நடிகை..!!

You May Like